நெகிழியினில் நெஞ்சம் கொண்டு - நிமிர்ந்து நில்

பாடல்: நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
படம்: நிமிர்ந்து நில்
எழுதியவர்: மதன் கார்க்கி

நெகிழியினில் நெஞ்சம் கொண்டே உனை விலகிப் போனவள்
நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இளகி நிற்கிறேன்
அணையும் திரி தூண்டிட ஒளி மீண்டிட
எனை தீண்டிடு உயிரே
இவளின் துயர் தீர்த்திட வழி சேர்த்தட
விரல் கோர்த்திடு உயிரே

நாலாப் புறமும் நாலாயிரம் நீ
ஆனால் உன்னை தேடினேன்

நெகிழியினில் நெஞ்சம் கொண்டே உனை விலகிப் போனவள்
நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இளகி நிற்கிறேன்

ஹே... பவளப் பாறை படலம் போலே
மனதில் நிறைந்தாள்
இமைகள் மூடி திறக்கும் முன்னே
எதனால் மறைந்தாள்

உன்மையில் உன் உன்மையில் என் காதலை பிரிந்தேன்
இன்மையில் இன்மையில் உன் தன்மையை அறிந்தேன்
கடந்தோடிடும் கணம் யாவிலும்
எனதேக்கமே கனக்கும்.

ஹே.. நெகிழியினில் நெஞ்சம் என்றாய்
நெருப்பை ஏன் கேட்கிறாய்
நெருஞ்சி முள்ளை போலே நின்றேன்
நெருங்கி வர பார்க்கிறாய்

உலகம் அறியா குழந்தை எனவே உனை நான் நினைத்தேன்
உனையே உலகம் வணங்கும் பொழுது என் மடமை உணர்ந்தேன்

மாற்றிட எனை மாற்றிட இந்த பூமியே நினைக்க
காதலே நீ மாறினாய் இதை எங்கு நான் உரைக்க

எனை ஏற்றிட உனை ஊற்றிட உயிர் ஏற்றிடு உயிரே

நாலாப் புறமும் நாலாயிரம் நீ
ஆனால் உன்னை தேடினேன்

------------------------------------------------------------------------------------------------------
~ Negizhiyinil Nenjam - Nimirndhu Nil lyrics in tamil ~

Comments

Popular posts from this blog

ஆலுவா புழையுடெ தீரத்து

ஜிமிக்கி கம்மல்

கொண்டல் வண்ணனை - பன் கே தித்லி தில் உடா